குறள் 1079
உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்
வடுக்காண வற்றாகும் கீழ்.Utuppadhooum Unpadhooum Kaanin Pirarmel
Vatukkaana Vatraakum Keezh
- விளக்கம்
- பிறர் நன்றாக உடுத்துவதையும் வயிறார உண்பதையும் கண்டால், கீழ்மக்கள் பொறாமையால் அவர்கள்மேல் ஏதேனும் குற்றம் கண்டுபிடித்துச் சொல்வதில் வல்லவர்களாகிவிடுவர். 'வடு' என்றால் குற்றம், பழி; 'வற்று' என்றால் திறமை. பிறர் மகிழ்ச்சியைப் பொறுக்க முடியாமை கயமையின் இயல்பு. அடுத்தவர் நலமாக வாழ்வதைக் கண்டு மகிழும் மனமே நல்ல மனம்.
- பொருள் (ஆங்கிலத்தில்)
- When the base see others well dressed and well fed, they become remarkably skilled at finding some fault to pin on them.
பழைய ஆங்கில மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலப் பொருள் (டபிள்யூ. எச். ட்ரூ, ஜான் லாசரஸ்)
- The base will bring an evil (accusation) against others, as soon as he sees them (enjoying) good food.
- ஆங்கில மொழிபெயர்ப்பு (ஜி. யு. போப்)
- If neighbours clothed and fed he see, the base Is mighty man some hidden fault to trace.