குறள் 1116
மதியும் மடந்தை முகனும் அறியா
பதியின் கலங்கிய மீன்.Madhiyum Matandhai Mukanum Ariyaa
Padhiyin Kalangiya Meen
- விளக்கம்
- வானில் உள்ள விண்மீன்கள், நிலவுக்கும் இந்த இளம்பெண்ணின் முகத்துக்கும் வேறுபாடு தெரியாமல் குழம்பித் தம் இடங்களை விட்டு அலைகின்றன என்கிறான் காதலன். பதி என்றால் இருப்பிடம்; மீன் என்றால் விண்மீன். அவளுடைய முகம் இன்னொரு நிலவு போல ஒளிர்கிறது என்பதே இதன் உட்கருத்து.
- பொருள் (ஆங்கிலத்தில்)
- The stars have strayed from their places in confusion, unable to tell the moon apart from this young woman's face.
பழைய ஆங்கில மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலப் பொருள் (டபிள்யூ. எச். ட்ரூ, ஜான் லாசரஸ்)
- The stars have become confused in their places not being able to distinguish between the moon and the maid's countenance.
- ஆங்கில மொழிபெயர்ப்பு (ஜி. யு. போப்)
- The stars perplexed are rushing wildly from their spheres; For like another moon this maiden's face appears.