குறள் 1232
நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்
பசந்து பனிவாரும் கண்.Nayandhavar Nalkaamai Solluva Polum
Pasandhu Panivaarum Kan
- விளக்கம்
- தலைவி கூறுவது. பசலை நிறம் படர்ந்து கண்ணீர் வடிக்கும் என் கண்கள், நான் விரும்பியவர் என்மீது அன்பு காட்டாமல் இருப்பதை ஊராருக்குச் சொல்லிக் காட்டுவன போலத் தோன்றுகின்றன. நயந்தவர் என்பது விரும்பிய காதலர்; நல்காமை என்பது அருள் செய்யாமை. மனத்தில் மறைத்து வைக்கும் துயரை உடல் தானே வெளிப்படுத்திவிடும் என்பது கருத்து.
- பொருள் (ஆங்கிலத்தில்)
- My eyes, grown pale and streaming with tears, seem to be telling everyone how unkind the one I love has been to me.
பழைய ஆங்கில மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலப் பொருள் (டபிள்யூ. எச். ட்ரூ, ஜான் லாசரஸ்)
- The discoloured eyes that shed tears profusely seem to betray the unkindness of our beloved.
- ஆங்கில மொழிபெயர்ப்பு (ஜி. யு. போப்)
- The eye, with sorrow wan, all wet with dew of tears, As witness of the lover's lack of love appears.