குறள் 126
ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து.Orumaiyul Aamaipol Aindhatakkal Aatrin
Ezhumaiyum Emaap Putaiththu
- விளக்கம்
- ஆமை ஆபத்து வரும்போது தன் தலையையும் நான்கு கால்களையும் ஓட்டுக்குள் இழுத்துக்கொள்கிறது. அதுபோல ஒருவன் ஒரு பிறவியில் கண், காது, மூக்கு, நாக்கு, மெய் என்னும் ஐம்புலன்களையும் தீய வழியில் செல்லவிடாமல் அடக்க முடிந்தால், அது அவனுக்கு ஏழு பிறவிகளிலும் காவலாக நின்று பாதுகாக்கும். 'ஏமாப்பு' என்றால் பாதுகாப்பு. புலனடக்கத்தின் பயன் நீண்ட காலம் நிலைக்கும் என்பது கருத்து.
- பொருள் (ஆங்கிலத்தில்)
- If, in a single lifetime, one can draw in the five senses as a tortoise withdraws its limbs, it will shield them through seven lifetimes.
பழைய ஆங்கில மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலப் பொருள் (டபிள்யூ. எச். ட்ரூ, ஜான் லாசரஸ்)
- Should one throughout a single birth, like a tortoise keep in his five senses, the fruit of it will prove a safe-guard to him throughout the seven-fold births..
- ஆங்கில மொழிபெயர்ப்பு (ஜி. யு. போப்)
- Like tortoise, who the five restrains In one, through seven world bliss obtains.