குறள் 356
கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி.Katreentu Meypporul Kantaar Thalaippatuvar
Matreentu Vaaraa Neri
- விளக்கம்
- இந்த வாழ்நாளிலேயே நல்ல நூல்களைக் கற்று, உண்மைப் பொருளை உணர்ந்தவர்கள், மீண்டும் இந்த உலகில் பிறந்து வர வேண்டாத வழியை அடைவார்கள். 'மற்று ஈண்டு வாரா நெறி' என்பது மறுபடியும் இங்குத் திரும்பி வராத பாதையாகிய பிறவி நீங்கிய நிலையைக் குறிக்கிறது.
- பொருள் (ஆங்கிலத்தில்)
- Those who learn here and come to know the ultimate truth set out on the path from which there is no coming back into this world.
பழைய ஆங்கில மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலப் பொருள் (டபிள்யூ. எச். ட்ரூ, ஜான் லாசரஸ்)
- They, who in this birth have learned to know the True Being, enter the road which returns not into this world.
- ஆங்கில மொழிபெயர்ப்பு (ஜி. யு. போப்)
- Who learn, and here the knowledge of the true obtain, Shall find the path that hither cometh not again.