குறள் 37
அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.Araththaaru Ithuvena Ventaa Sivikai
Poruththaanotu Oorndhaan Itai
- விளக்கம்
- 'சிவிகை' என்பது பல்லக்கு. அறத்தின் பயன் இன்னது என்று சொற்களால் விளக்கிக்கொண்டிருக்க வேண்டியதில்லை. பல்லக்கைத் தோளில் சுமந்து செல்பவனுக்கும் அதில் அமர்ந்து செல்பவனுக்கும் இடையே உள்ள வேறுபாட்டைப் பார்த்தாலே அது புரியும் என்பது பெரும்பாலான உரையாசிரியர்கள் கொள்ளும் பொருள். முன்பு செய்த நல்வினையின் பயனே இந்த வேறுபாட்டுக்குக் காரணம் என்று அவர்கள் விளக்குகின்றனர்.
- பொருள் (ஆங்கிலத்தில்)
- There is no need to explain in words what virtue yields; it can be seen in the difference between the man who carries a palanquin and the man who rides in it.
பழைய ஆங்கில மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலப் பொருள் (டபிள்யூ. எச். ட்ரூ, ஜான் லாசரஸ்)
- The fruit of virtue need not be described in books; it may be inferred from seeing the bearer of a palanquin and the rider therein.
- ஆங்கில மொழிபெயர்ப்பு (ஜி. யு. போப்)
- Needs not in words to dwell on virtue's fruits: compare The man in litter borne with them that toiling bear.