குறள் 377
வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது.Vakuththaan Vakuththa Vakaiyallaal Koti
Thokuththaarkku Thuyththal Aridhu
- விளக்கம்
- ஒவ்வொருவருக்கும் உரியதைப் பகுத்து அளிக்கும் ஊழ் வகுத்த அளவின்படியே தவிர, கோடிக்கணக்கில் பொருளைச் சேர்த்து வைத்தவர்களாலும் அதை நுகர்ந்து மகிழ முடியாது. சேர்ப்பது ஒன்று, அதைத் துய்ப்பது வேறொன்று. பெரும் செல்வம் இருந்தும் நோயாலோ கவலையாலோ அதை அனுபவிக்க முடியாமல் வாழ்பவர்களை நாம் காண்கிறோம்.
- பொருள் (ஆங்கிலத்தில்)
- Even those who pile up millions can enjoy them only to the extent that the one who apportions all things has allotted to them.
பழைய ஆங்கில மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலப் பொருள் (டபிள்யூ. எச். ட்ரூ, ஜான் லாசரஸ்)
- Even those who gather together millions will only enjoy them, as it has been determined by the disposer (of all things).
- ஆங்கில மொழிபெயர்ப்பு (ஜி. யு. போப்)
- Save as the 'sharer' shares to each in due degree, To those who millions store enjoyment scarce can be.