குறள் 481
பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது.Pakalvellum Kookaiyaik Kaakkai Ikalvellum
Vendharkku Ventum Pozhudhu
- விளக்கம்
- கூகை என்பது ஆந்தை. அதற்குப் பகலில் கண் சரியாகத் தெரியாது, அதனால் அதைவிட வலிமை குறைந்த காக்கைகூடப் பகலில் அதை வென்றுவிடும். அதுபோலப் பகைவரை (இகல் = பகை) வெல்ல விரும்பும் அரசர்க்கும் தமக்கு ஏற்ற காலம் தேவை. வலிமை மட்டும் போதாது; ஏற்ற நேரம் பார்த்துச் செயல்பட்டால் எளியவரும் வெல்ல முடியும்.
- பொருள் (ஆங்கிலத்தில்)
- In daylight a crow can defeat an owl, which is stronger but cannot see well then. Likewise, a king who wants to beat his enemies needs the right time on his side.
பழைய ஆங்கில மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலப் பொருள் (டபிள்யூ. எச். ட்ரூ, ஜான் லாசரஸ்)
- A crow will overcome an owl in the day time; so the king who would conquer his enemy must have (a suitable) time.
- ஆங்கில மொழிபெயர்ப்பு (ஜி. யு. போப்)
- A crow will conquer owl in broad daylight; The king that foes would crush, needs fitting time to fight.