குறள் 92
அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின்.Akanamarndhu Eedhalin Nandre Mukanamarndhu
Insolan Aakap Perin
- விளக்கம்
- அகன் என்பது அகம், அதாவது மனம்; முகன் என்பது முகம்; ஈதல் என்றால் கொடுத்தல். உள்ளம் மகிழ்ந்து பிறருக்குப் பொருள் கொடுப்பது நல்லதுதான். ஆனால் முகம் மலர்ந்து இனிமையாகப் பேசும் பண்பு அதைவிடவும் சிறந்தது. கொடுக்க எதுவும் இல்லாத நேரத்திலும், ஒரு புன்னகையும் அன்பான சொல்லும் பிறர் மனத்தை நிறைவு செய்யும்.
- பொருள் (ஆங்கிலத்தில்)
- Giving gifts with a glad heart is good, but greeting people with a bright face and speaking kindly to them is even better.
பழைய ஆங்கில மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலப் பொருள் (டபிள்யூ. எச். ட்ரூ, ஜான் லாசரஸ்)
- Sweet speech, with a cheerful countenance is better than a gift made with a joyous mind.
- ஆங்கில மொழிபெயர்ப்பு (ஜி. யு. போப்)
- A pleasant word with beaming smile's preferred, Even to gifts with liberal heart conferred.