குறள் 936
அகடாரார் அல்லல் உழப்பர்சூ தென்னும்
முகடியான் மூடப்பட் டார்.Akataaraar Allal Uzhapparsoo Thennum
Mukatiyaan Mootappat Taar
- விளக்கம்
- முகடி என்பது கேட்டையும் வறுமையையும் தருபவளாகக் கருதப்படும் தீய உருவம். சூது என்னும் அந்த முகடியால் மூடப்பட்டவர்கள் வயிறு நிறைய உண்ணவும் முடியாமல் பலவகைத் துன்பங்களில் உழல்வார்கள். சூதில் சிக்கியவருக்கு அடிப்படைத் தேவையான உணவும் கிடைக்காமல் போகும் என்பது கருத்து.
- பொருள் (ஆங்கிலத்தில்)
- Those who are wrapped up by gambling, that very embodiment of misfortune, will never have their hunger satisfied and will toil through endless hardship.
பழைய ஆங்கில மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலப் பொருள் (டபிள்யூ. எச். ட்ரூ, ஜான் லாசரஸ்)
- Those who are swallowed by the goddess called "gambling" will never have their hunger satisfied, but suffer the pangs of hell in the next world.
- ஆங்கில மொழிபெயர்ப்பு (ஜி. யு. போப்)
- Gambling's Misfortune's other name: o'er whom she casts her veil, They suffer grievous want, and sorrows sore bewail.