குறள் 99
இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது?Insol Inidheendral Kaanpaan Evankolo
Vansol Vazhangu Vadhu?
- விளக்கம்
- இனிய சொல் பிறருக்கும் தனக்கும் இன்பம் தருவதைத் தன் பட்டறிவில் கண்டவர், பிறரிடம் கடுமையான சொற்களைப் பேசுவது ஏன் என்று வள்ளுவர் வியந்து கேட்கிறார். தமக்கு இனிமை பிடிக்கும் என்பதை அறிந்தவர், அதையே பிறருக்கும் தர வேண்டும் என்பது கருத்து. நம்மிடம் யாராவது அன்பாகப் பேசும்போது நாம் அடையும் மகிழ்ச்சியை நினைத்தால், கடுஞ்சொல் பேசத் தோன்றாது.
- பொருள் (ஆங்கிலத்தில்)
- If someone has seen for themselves how much joy kind words bring, why would they ever choose to speak harshly?
பழைய ஆங்கில மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலப் பொருள் (டபிள்யூ. எச். ட்ரூ, ஜான் லாசரஸ்)
- Why does he use harsh words, who sees the pleasure which sweet speech yields ?.
- ஆங்கில மொழிபெயர்ப்பு (ஜி. யு. போப்)
- Who sees the pleasure kindly speech affords, Why makes he use of harsh, repellant words.