புதுடில்லி: மத்திய கிழக்கில் நீடிக்கும் பதற்றம் காரணமாக, டில்லியில் இருந்து பல மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமான சேவைகள் மூன்றாவது நாளாகவும் பாதிப்பை சந்தித்து வருகின்றன.

விமான நிலைய அதிகாரிகள் தெரிவிப்பதன்படி, இன்று மட்டும் டில்லி விமான நிலையத்தில் இருந்து சுமார் 87 சர்வதேச விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதில் 37 புறப்பாடுகளும் 50 வருகைகளும் அடங்கும்.

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழல் தொடர்வதால் அப்பகுதியில் பதற்றம் இன்னும் குறையவில்லை; இதன் தாக்கம் சர்வதேச அளவிலும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலவரத்தால் கடந்த 2 நாட்களில் மட்டும் இந்திய விமான நிறுவனங்களின் மொத்தம் 760 விமான சேவைகள் ரத்தாகியுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.