டெஹ்ரானில் இருந்து வெளியான தகவலின்படி, இஸ்ரேல் பிரதமர் அலுவலகத்தை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக ஈரான் தெரிவித்துள்ளது. தாக்குதலுக்குப் பிறகு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உயிருடன் உள்ளாரா இல்லையா என்பது குறித்து தெரியவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் இஸ்ரேல் விமானப்படை அலுவலகமும் இலக்காக இருந்ததாக ஈரான் தரப்பு கூறுகிறது. இதை ஈரானின் புரட்சிகர காவல்படை (ஐஆர்ஜிசி) வெளியிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்குப் பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப் படைகள் மூன்றாவது நாளாக தொடர்ந்து கூட்டுத் தாக்குதல் நடத்தி வருவதாகவும் ஈரான் கூறியுள்ளது.

மேலும், பதிலடி நிச்சயம் என்றும், பேச்சுவார்த்தையில் ஈடுபடமாட்டோம் என்றும் ஈரான் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அமெரிக்க ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடைபெறுவதால் பிராந்தியத்தில் அச்சம் அதிகரித்துள்ளதாகவும், இந்த புதிய தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.