ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடர்பான போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அதன் தாக்கம் இந்திய பங்குச்சந்தைகளிலும் வெளிப்பட்டு திங்களன்று கடும் சரிவு ஏற்பட்டது.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,400 புள்ளிகளுக்கும் மேல் சரிந்து சுமார் 79,820 புள்ளிகளில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தை நிப்டி 444 புள்ளிகள் குறைந்து சுமார் 24,734 புள்ளிகளில் வர்த்தகமாகியது.
இந்த வீழ்ச்சியால் சில மணி நேரத்திலேயே முதலீட்டாளர்களுக்கு சுமார் ரூ.9 லட்சம் கோடி அளவிலான மதிப்பிழப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போர் காரணமாக கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு போக்குவரத்தில் தடைகள் ஏற்பட்டதால், அவற்றின் விலை 15% வரை உயர்ந்ததாக கூறப்படுகிறது. போர் நீடித்தால் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 100 டாலர் வரை செல்லக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.




