ஈரானில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல் மூன்றாவது நாளாக தொடர்கிறது. தாக்குதல் தொடங்கியதிலிருந்து இதுவரை 555 பேர் உயிரிழந்துள்ளதாக ஈரான் அரசு ஊடகம் தெரிவித்ததாக செய்திகள் கூறுகின்றன.
தலைநகர் டெஹ்ரான் உள்ளிட்ட, அணுசக்தி மையங்கள் உள்ள நகரங்கள் கடுமையான சேதத்தை சந்தித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி கமேனியின் இல்லமும் அலுவலகமும் பெரிதும் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதலில் கமேனி உயிரிழந்ததாகவும், ஈரானில் 131 நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.




