திமுக-காங்கிரஸ் கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை முடிவுக்கு வராத நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மார்ச் 3 அன்று சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். அவருடன் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையும் சென்றிருந்தார்.
திமுக தலைமையிலான கூட்டணியில் தொடர்வதா அல்லது த.வெ.க.வுடன் மாற்றுக் கூட்டணி அமைப்பதா என்ற கேள்வி எழுந்துள்ள சூழலில், காங்கிரஸ் பொதுச்செயலர் வேணுகோபால் கட்சியின் எம்.பி.,க்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்களிடம் தனித்தனியாக கருத்து கேட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்த ஆலோசனைகளின் அடிப்படையில், தொகுதி எண்ணிக்கை தொடர்பான முடிவை இன்று இரவு வரை தெரிவிக்க திமுகவுக்கு காங்கிரஸ் தலைமை கெடு விதித்துள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் நடந்த பேச்சுவார்த்தைகளிலும் உடன்பாடு ஏற்படாததால் இழுபறி நீடிக்கிறது.
இந்த நிலையில் நடந்த சிதம்பரம்-ஸ்டாலின் சந்திப்பு அரசியல் வட்டாரங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இன்று திமுக-காங்கிரஸ் தொகுதி பங்கீடு இறுதி செய்து ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுமா என்ற எதிர்பார்ப்பும் உருவாகியுள்ளது.




