பிரதமர் நரேந்திர மோடியின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனல் 3 கோடி சந்தாதாரர்களை கடந்துள்ளதாகவும், இதன் மூலம் யூடியூபில் உலகத் தலைவர்களில் அவர் முதலிடத்தில் இருப்பதாகவும் செய்தி தெரிவிக்கிறது.

தொழில்நுட்பம் ஆதிக்கம் செலுத்தும் இக்காலத்தில் சமூக ஊடகங்கள் மக்களின் அன்றாட வாழ்வில் முக்கிய இடம் பெற்றுள்ள நிலையில், பயணங்கள், உலகத் தலைவர்களுடனான சந்திப்புகள், அரசு நிகழ்ச்சிகள், வாழ்த்துகள் உள்ளிட்ட முக்கிய தருணங்களைப் பகிர பிரதமர் சமூக ஊடகங்களை பயன்படுத்தி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

யூடியூபில் அதிக சந்தாதாரர்கள் கொண்ட தலைவர்கள் பட்டியலில் இரண்டாமிடத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் இருப்பதாகவும், அவரை சுமார் 40 லட்சம் பேர் பின்தொடர்வதாகவும் கூறப்பட்டுள்ளது. மூன்றாமிடத்தில் பிரேசில் அதிபர் லூலா டா சில்வா (15 லட்சம்), நான்காமிடத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி (14 லட்சம்) இடம்பெற்றுள்ளனர்.

மேலும் சால்வடோர் அரசியல்வாதி நயிப் புகேலே (5.79 லட்சம்), பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் (3.91 லட்சம்), இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி (1.58 லட்சம்) ஆகியோரும் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இன்ஸ்டாகிராமிலும் பிரதமர் மோடியின் பின்தொடர்வோர் எண்ணிக்கை 10 கோடியை கடந்துள்ளதாகவும், சர்வதேச அரசியல் தலைவர்களில் அதிகம் பின்தொடரப்படும் தலைவராக அவர் முன்னிலையில் இருப்பதாகவும் செய்தி கூறுகிறது. இன்ஸ்டாகிராமில் டிரம்ப் இரண்டாமிடத்தில் இருந்து, அவரை 4.30 கோடி பேர் பின்தொடர்வதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.