புதுடில்லி: வரவுள்ள ராஜ்யசபா தேர்தலில் பீஹார் மாநிலத்தில் இருந்து பாஜ தேசியத் தலைவர் நிதின் நபின் போட்டியிட உள்ளதாக பாஜ அறிவித்துள்ளது.
பீஹாரைச் சேர்ந்த எம்எல்ஏ ஆன நிதின் நபின், சில மாதங்களுக்கு முன்பு பாஜவின் தேசியத் தலைவராக பொறுப்பேற்றார். இந்நிலையில், அவர் ராஜ்யசபா தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
நாடு முழுவதும் காலியாகும் 37 ராஜ்யசபா உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் மார்ச் 16-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பாளர்கள் பட்டியலை பாஜ வெளியிட்டுள்ளது.
9 பேர் கொண்ட அந்த பட்டியலில் நிதின் நபின் (பீஹார்) தவிர, சிவேஷ் குமார் (பீஹார்), தரேஷ் கோவாலா மற்றும் ஜோகென் மோகன் (அசாம்), லட்சுமி வர்மா (சத்தீஸ்கர்), சஞ்சய் பாட்டியா (ஹரியானா), மன்மோகன் சமல் மற்றும் சுஜித் குமார் (ஒடிஷா), ராகுல் சின்ஹா (மேற்கு வங்கம்) ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.




