சென்னை: வழக்கமான தரச் சோதனையின் ஒரு பகுதியாக ஜனவரி மாதத்தில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட மருந்துகளில் 29% தரமற்றவை என கண்டறியப்பட்டுள்ளது.
நாடு முழுதும் விற்பனை செய்யப்படும் மருந்துகளின் தரத்தை உறுதி செய்ய மத்திய மற்றும் மாநில அரசுகள் மாதந்தோறும் ஆய்வுகள் மற்றும் பரிசோதனைகளை நடத்துகின்றன. மருந்தகங்கள், சில்லரை விற்பனையகங்கள், மொத்த விற்பனை கூடங்கள், கிடங்குகள் மற்றும் உற்பத்தி அலகுகளில் இருந்து சில மருந்துகள் மாதிரியாக எடுக்கப்படுகின்றன.
மருந்து கட்டுப்பாட்டு வாரியத்தின் வழிமுறைகளின்படி தயாரிக்கப்பட்டுள்ளனவா என்பதைக் கொண்டு மதிப்பீடு செய்யப்படுகிறது. நிர்ணயிக்கப்பட்ட தரநிலைகளை பூர்த்தி செய்யாதவை தரமற்ற மருந்துகளாக வகைப்படுத்தப்படுகின்றன.
ஜனவரியில் நாடு முழுதும் 1,000க்கும் மேற்பட்ட மருந்துகள் ஆய்வு செய்யப்பட்டதில், 215 மருந்துகள் தரமற்றவை என தெரிய வந்தது. இதில் தமிழகத்தில் மட்டும் 43 மருந்துகள் இடம்பெற்றுள்ளன.
அதேபோல் கர்நாடகாவில் 21% மற்றும் ராஜஸ்தானில் 17% மருந்துகள் தரமற்றவை இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.




