மேற்கு ஆசியாவில் மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடங்கிய பெரிய அளவிலான தாக்குதல்கள் சர்வதேச சட்டத்திற்கு முரணானவை என கனடா தெரிவித்துள்ளது.
ஒட்டாவாவில் பேசிய கனடா பிரதமர் மார்க் கார்னி, இந்தப் போரை சர்வதேச ஒழுங்கு தோல்வியடைந்ததற்கான இன்னொரு உதாரணம் என குறிப்பிட்டார். ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்கள் சர்வதேச சட்டத்திற்கு எதிரானவை என்றும் அவர் கூறினார்.
மோதலை விரைவில் முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திய கார்னி, அந்த இலக்கை அடைய கனடா உதவ தயாராக இருப்பதாக தெரிவித்தார். மேலும், அமெரிக்காவும் இஸ்ரேலும் ஐ.நா. மற்றும் நட்பு நாடுகளுடன் கலந்தாலோசிக்காமல் செயல்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
இதற்கிடையில், ஈரானுக்கு ஆதரவாக சீனா குரல் கொடுத்து, தாக்குதலை நிறுத்துமாறு அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை வலியுறுத்தியதாக செய்தி குறிப்பிடுகிறது. தற்போது கனடா பிரதமரும் மோதலை விரைவில் முடிக்க அழைப்பு விடுத்துள்ளார்.




