சென்னையில் இன்று (மார்ச் 4) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,120 குறைந்து ரூ.1,21,600 ஆக விற்பனையாகிறது. கிராம் விலை ரூ.265 குறைந்து ரூ.15,200 ஆக உள்ளது.

சர்வதேச நிலவரங்களின் தாக்கத்தால் கடந்த பிப்ரவரி மாதம் முதல் தங்கம், வெள்ளி விலைகளில் ஏற்றத் தாழ்வுகள் காணப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் மார்ச் 2 அன்று ஆபரண தங்கம் கிராம் ரூ.15,660-க்கும், சவரன் ரூ.1,25,280-க்கும் விற்பனையானது; வெள்ளி கிராம் ரூ.315 ஆக இருந்தது.

மார்ச் 3 அன்று காலை தங்கம் கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.15,650 ஆகவும், சவரன் ரூ.80 சரிந்து ரூ.1,25,200 ஆகவும் இருந்தது. அதே நாள் மாலை மீண்டும் கிராமுக்கு ரூ.185 குறைந்து ரூ.15,465 ஆகவும், சவரன் ரூ.1,480 குறைந்து ரூ.1,23,720 ஆகவும் விற்பனையானது; வெள்ளி விலையில் மாற்றமில்லை.

இன்றைய சரிவுடன் கடந்த 2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு மொத்தம் ரூ.3,680 குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று வெள்ளி விலையும் சரிவை சந்தித்துள்ளது. கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.295 ஆகவும், கிலோவுக்கு ரூ.20,000 குறைந்து ரூ.2,95,000 ஆகவும் விற்பனையாகிறது.