போர் பதற்றம் எதிரொலியாக, வளைகுடா நாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கு உதவ சிறப்பு கட்டுப்பாட்டு அறையை மத்திய அரசு திறந்துள்ளதாக வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், இந்த கட்டுப்பாட்டு அறை தினமும் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்படும் என்று கூறினார். உதவி தேவைப்படுவோர் 1800118797 என்ற இலவச எண்ணை தொடர்புகொள்ளலாம்.
மேலும் +91 11 2301 2113, +91 11 2301 4104, +91 11 2301 7905 ஆகிய எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.
இந்திய தூதரகங்கள்/தூதுவலகங்கள் அறிவித்துள்ள அவசர உதவி எண்கள்: பஹ்ரைன் (+973 39418071); ஈரான் (+989128109115 / +989128109102 / +989128109109 / +989932179359); ஈராக் (+964 771 651 1185 / +964 770444 4899); இஸ்ரேல் (+972 54 7520711 / +972 54 2428378); ஜோர்டான் (+962 770 422 276); குவைத் (+965 65501946); லெபனான் (+961 76860128); ஓமன் (+968 98282270 / 80071234); கத்தார் (+974 55647502); பாலஸ்தீனம் (+970 592916418); சவூதி அரேபியா—ரியாத் (+966 11 4884697 / 800 247 1234) மற்றும் ஜெத்தா (+966 126648660 / +966 12 2614093); ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (+971 543090571 / 800 46342).




