இலங்கை கடற்பகுதியில் ஈரானுக்கு சொந்தமான ஐஆர்ஐஎஸ் டெனா கப்பல் மீது நீர்மூழ்கிக் கப்பல் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் 78 பேர் காயமடைந்ததாகவும், 101 பேர் காணாமல் போயுள்ளதாகவும் கூறப்படுகிறது.

காலி துறைமுகத்திலிருந்து சுமார் 40 கடல் மைல் தொலைவில் இந்த சம்பவம் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலுக்குப் பிறகு இலங்கை கடற்படையின் உதவி கோரப்பட்டதைத் தொடர்ந்து, கடற்படை அங்கு விரைந்து மீட்புப் பணிகளை தொடங்கியது.

மீட்புப் பணியில் 30 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்தை இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் உறுதி செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஈரான் தொடர்பான தாக்குதல்கள் குறித்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் பெயர்கள் குறிப்பிடப்படும் சூழலில், இலங்கை கடல்பகுதியில் நடந்த இந்த சம்பவம் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.