வாஷிங்டன்: நடந்து வரும் போர் மேலும் 10 நாட்கள் நீடித்தால், அமெரிக்காவின் முக்கியமான ஏவுகணை கையிருப்பில் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என பென்டகன் எச்சரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேற்காசியாவில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதாகவும், அதற்கு ஈரான் பதிலடி தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் சவுதி அரேபியா, கத்தார், குவைத் போன்ற வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களையும் ஈரான் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் போர் ஒரு வாரத்தில் முடியும் என முன்பு கூறியிருந்த நிலையில், நீண்டகாலப் போருக்கும் தயாராக இருப்பதாக ஈரான் தெரிவித்துள்ளது. போர் ஐந்தாவது நாளில் தொடரும் சூழலில், இன்னும் 10 நாட்கள் நீடித்தால் முக்கிய ஏவுகணை கையிருப்பு தீர்ந்து விடலாம் என பென்டகன் அதிகாரிகள் டிரம்பிடம் விளக்கியதாக தகவல்.
குறிப்பாக, எஸ்எம்-3 (SM-3) போன்ற இடைமறித்து தாக்கும் ஏவுகணைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என அந்த தகவல்கள் கூறுகின்றன.




