சென்னை: த.வெ.க. சார்பில் தேர்தல் அறிக்கையை தயாரிக்க, கட்சியின் கொள்கை பரப்பு பொதுச் செயலர் அருண்ராஜ் தலைமையில் 12 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழு பல்வேறு மாவட்டங்களுக்கு நேரில் சென்று கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் மற்றும் சங்கப் பிரதிநிதிகளிடமிருந்து கோரிக்கைகள், பரிந்துரைகளைப் பெற்று அறிக்கையை உருவாக்கி வருகிறது. இணையதளம் வழியாகவும் கருத்துகள் பெறப்படுகின்றன.

இந்த நிலையில், த.வெ.க. முதற்கட்ட தேர்தல் அறிக்கையை மார்ச் 8ல் வெளியிட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

முதற்கட்ட அறிக்கையில் இளைஞர்கள் மற்றும் பெண்களை கவரும் வகையில் 10 வாக்குறுதிகள் இடம்பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், முழுமையான தேர்தல் அறிக்கையில் பள்ளி மாணவர்களுக்கு இலவச கையடக்க கணினி, இணைய சேவை உள்ளிட்ட வாக்குறுதிகள் இடம்பெறலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.