சென்னையில் இன்று (மார்ச் 5) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை மேலும் குறைந்துள்ளது. சவரனுக்கு ரூ.640 சரிந்து, ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கிராம் அடிப்படையில் ரூ.80 குறைந்து, ஒரு கிராம் ரூ.15,120 ஆக உள்ளது. அமெரிக்கா–இஸ்ரேல்–ஈரான் தொடர்பான பதற்றம் காரணமாக கடந்த வாரம் தங்கம், வெள்ளி விலை உயர்ந்த நிலையில், கடந்த சில தினங்களாக விலை சற்று தணிந்து வருகிறது.
இதற்கு முன், மார்ச் 3 அன்று தமிழகத்தில் ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ.15,465 என்றும், சவரனுக்கு ரூ.1,23,720 என்றும் விற்பனையானது. அன்றைய வெள்ளி விலை கிராமுக்கு ரூ.315 ஆக இருந்தது.
மார்ச் 4 அன்று தங்கம் கிராமுக்கு ரூ.265 குறைந்து ரூ.15,200 ஆகவும், சவரனுக்கு ரூ.2,120 சரிந்து ரூ.1,21,600 ஆகவும் விற்பனையானது. வெள்ளி கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.295 ஆகவும், கிலோ விலை ரூ.20,000 குறைந்து ரூ.2.95 லட்சமாகவும் இருந்தது.
இன்று (மார்ச் 5) வெள்ளி விலை மாற்றமின்றி கிராமுக்கு ரூ.295 மற்றும் கிலோக்கு ரூ.2.95 லட்சம் என்றே விற்பனையாகிறது.




