புதுடில்லி: ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா இந்திய துறைமுகங்களைப் பயன்படுத்தும் என்ற தகவலை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் (MEA) மறுத்துள்ளது.

அமெரிக்க முன்னாள் ராணுவ கர்னல் டக்ளஸ் மெக்ரிகோர் ஊடக பேட்டியில், அமெரிக்கா இந்தியாவையும் இந்தியத் துறைமுகங்களையும் சார்ந்து இருக்க வேண்டிய நிலை ஏற்படும் என கூறியதாக வெளியான கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தின.

இந்த நிலையில், வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் உண்மைச் சரிபார்ப்பு பிரிவு நடத்திய ஆய்வில், அந்தக் கூற்று முற்றிலும் உண்மைக்கு புறம்பானது எனத் தெரிவிக்கப்பட்டது. எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், இந்திய துறைமுகங்களைப் பயன்படுத்தி அமெரிக்க கப்பற்படை ஈரான் மீது தாக்குதல் நடத்தும் என கூறப்படும் செய்தி “ஆதாரமற்ற, ஜோடிக்கப்பட்ட” தகவல் என அமைச்சகம் குறிப்பிட்டது.

சமூக ஊடகங்களிலும் சில ஊடகங்களிலும் பரவிய இந்தக் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் இந்த மறுப்பு வெளியிடப்பட்டதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மறுப்பு மற்றும் உண்மைச் சரிபார்ப்பு முடிவைத் தவிர, கூடுதல் விவரங்களை அமைச்சகம் வெளியிடவில்லை.