சவுதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யு.ஏ.இ.), குவைத் உள்ளிட்ட மேற்காசியா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை இலக்காக வைத்து ஈரான் தாக்குதல் நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், சவுதி அரேபியா, யு.ஏ.இ., கத்தார் ஆகிய நாடுகள் தங்களை தற்காத்துக்கொள்ளும் வகையில் பதிலடி நடவடிக்கைகளை திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. மேற்காசியாவில் நாடுகளுக்கிடையேயான பிரிவினை பல ஆண்டுகளாக நீடித்து வருவதாகவும் குறிப்பிடப்படுகிறது.
அறிக்கையில், ஈரானுக்கு எதிராக உள்ள நாடுகளாக சிரியா, அஜர்பைஜான், யு.ஏ.இ., ஜோர்டான், குவைத், சவுதி அரேபியா, ஆப்கானிஸ்தான், கத்தார், பஹ்ரைன், ஆர்மேனியா ஆகியவை பட்டியலிடப்பட்டுள்ளன.
ஈரானுக்கு ஆதரவாக துருக்கி, ஈராக், ஏமன், லெபனான் ஆகிய நாடுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஓமன், எகிப்து, பாகிஸ்தான் ஆகியவை நடுநிலை நிலைப்பாட்டில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




