வளைகுடாவில் அமெரிக்க எண்ணெய் கப்பலை ஏவுகணையால் தாக்கியதாக ஈரான் தெரிவித்துள்ளது. தாக்குதலுக்குப் பிறகு அந்த கப்பல் நடுக்கடலில் தீப்பிடித்து எரிந்ததாக கூறப்படுகிறது.

தாக்குதல் நேரத்தில் கப்பலில் இருந்தவர்கள் மற்றும் பணியாளர்களின் நிலை குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.

இந்த தாக்குதல், இந்தியப் பெருங்கடலில் சென்றுகொண்டிருந்த ‘டீனா’ என்ற ஈரான் கடற்படை போர்க்கப்பல் மீது நடந்த தாக்குதலுக்கு பதிலடியாக மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த முன்தாக்குதலில் அமெரிக்காவின் டர்பிடோ ஏவுகணை தாக்குதலால் 87 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதுபோன்ற நடவடிக்கைக்கு அமெரிக்கா “வருத்தப்பட வேண்டி இருக்கும்” என ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி முன்பே எச்சரித்திருந்த நிலையில், தற்போது அமெரிக்க எண்ணெய் கப்பல் மீது தாக்குதல் நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.