அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்தியதாக கூறப்படும் வான் தாக்குதலில் உயிரிழந்த ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு, டெஹ்ரானில் மூன்று நாட்கள் பொதுமக்கள் இறுதி அஞ்சலி நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளதாக ஈரான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
86 வயதான கமேனி, 36 ஆண்டுகளுக்கும் மேலாக ஈரானின் உச்ச தலைவராக இருந்து, நாட்டின் வெளிநாட்டு மற்றும் ராணுவ கொள்கைகளில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கையின்படி, கடந்த பிப். 28 அன்று நடந்த தாக்குதலில் அவர் குடும்பத்துடன் உயிரிழந்தார்.
டெஹ்ரானில் உள்ள இமாம் கொமேனி தொழுகை மண்டபத்தில், இன்று இரவு 10.00 மணிமுதல் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும் என்றும், மூன்று நாட்கள் மக்கள் வந்து அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறினர்.
இறுதி ஊர்வலம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




