சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரியை நியமித்து ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தற்போது தலைமை நீதிபதியாக உள்ள மணீந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா மார்ச் 5 அன்று ஓய்வு பெற உள்ளார்.
அவருக்குப் பின் யாரை நியமிப்பது என்பதை முடிவு செய்ய உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகள் அடங்கிய கொலீஜியம் கூட்டம் நடைபெற்றது. இதில், கேரளா உயர்நீதிமன்ற நீதிபதியாக உள்ள சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரியை பரிந்துரைத்து, ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
அந்த பரிந்துரையை ஏற்று, தர்மாதிகாரியை தலைமை நீதிபதியாக நியமிக்கும் உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது. அவர் விரைவில் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தர்மாதிகாரி முன்பு மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றியவர். சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரை சொந்த ஊராகக் கொண்ட அவர், மத்திய பிரதேச உயர்நீதிமன்ற நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் கேரளா உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வருகிறார்.




