அமராவதி: 13 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியர் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதை அடுத்த 90 நாட்களுக்குள் தடை செய்யும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆந்திரப் பிரதேச முதல்வர் என். சந்திரபாபு நாயுடு வியாழக்கிழமை தெரிவித்தார்.

சட்டசபையில் பேசிய அவர், 13 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களை அணுக முடியாத வகையில் உறுதி செய்யப்படும் என்றும், இந்தத் திட்டம் தற்போது பரிசீலனையில் இருப்பதாகவும் கூறினார். ஆலோசனைகளுக்குப் பிறகு அடுத்த கட்ட முடிவுகள் எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், 13 முதல் 16 வயதுக்குட்பட்டோருக்கும் இந்தத் தடையை நீட்டிக்க வேண்டுமா என்பது குறித்து தீவிரமாக விவாதித்து வருவதாக முதல்வர் தெரிவித்தார்.

இதற்கிடையில், கர்நாடகாவில் இன்று பட்ஜெட் உரையில் முதல்வர் சித்தராமையா, 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்கப்படும் என்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.