துபாயில் வசிப்பவர்களின் மொபைல் போன்களுக்கு அரசு சார்பில் குறுஞ்செய்தி (SMS) எச்சரிக்கைகள் அனுப்பப்படுகின்றன. குறிப்பிட்ட பகுதிகளில் ஏவுகணை தாக்குதல் நடக்கக்கூடும் என எச்சரித்து, பொதுமக்கள் வெளியில் நடமாட வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வளைகுடா பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் இந்த எச்சரிக்கைகள் வந்துள்ளன. ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படையினரின் தாக்குதல்கள் அதிகரிப்பதாகவும், அதற்கு பதிலடியாக வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்களை ஈரான் தாக்குவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

துபாயில் வசிக்கும் இந்தியர் ஒருவர், தங்களுக்கு தொடர்ச்சியாக நான்கு எச்சரிக்கைகள் வந்ததாக கூறினார். அவசர நிலைக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கி சேமித்து வைத்துள்ளதாகவும், பாஸ்போர்ட் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை ஒரு பையில் பாதுகாப்பாக வைத்துத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதற்கிடையே, முன்னெச்சரிக்கையாக துபாயில் உள்ள பூங்காக்கள் மற்றும் ரிசார்ட்டுகள் மார்ச் 7 மற்றும் 8 தேதிகளில் மூடப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.