சென்னையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் த.வெ.க. தலைவர் விஜய் மற்றும் நடிகை திரிஷா ஒரே நிற உடையில் ஒன்றாக பங்கேற்றது கவனம் ஈர்த்துள்ளது.

இதற்கிடையில், விஜயின் மனைவி சங்கீதா செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விவாகரத்து மனு தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், விஜய் ஒரு நடிகையுடன் திருமணம் தாண்டிய உறவில் இருப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், இது அடுத்த மாதம் விசாரணைக்கு வர உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த பின்னணியில், சென்னை திருவான்மியூரில் தயாரிப்பாளர் கல்பாத்தி சுரேஷ் இல்லத்தில் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விஜய் பட்டு வேஷ்டி-சட்டை அணிந்திருந்தார்; திரிஷா அதே நிறத்தில் சேலை அணிந்து பங்கேற்றார்.

இருவரும் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்ற வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, விவகாரத்தை மேலும் பேசுபொருளாக்கியுள்ளது.