போர் சூழ்நிலை காரணமாக கத்தாரில் வசிக்காதபோதும் அங்கு சிக்கித் தவிக்கும் இந்தியர்களின் விவரங்களை சேகரிக்கும் பணியை தோஹாவில் உள்ள இந்திய தூதரகம் தொடங்கியுள்ளது.

தூதரகம் வெளியிட்ட அறிவிப்பில், பிப்.28 முதல் மார்ச் 7 வரை கத்தாரிலிருந்து புறப்படும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் குறுகிய கால விசாவுடன் வந்த இந்தியர்கள் உள்ளிட்டோர் ஆன்லைன் படிவத்தில் தங்களின் தகவல்களை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை, கத்தாரில் வசிக்காத நிலையில் அங்கு சிக்கியுள்ள நபர்களின் சரியான எண்ணிக்கை மற்றும் அவர்களின் விவரங்களை அறிய மட்டுமே என தூதரகம் விளக்கம் அளித்துள்ளது.

மேலும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக முன்பு வழங்கப்பட்ட இணைப்பு இனி செயல்படாது என்றும், புதிய இணைப்பை பயன்படுத்துமாறு தெரிவித்துள்ளது: forms.gle/A5mqrqjeigBuTUrj9.