டெஹ்ரானில் இருந்து வெளியான தகவலின்படி, யுஏஇ, சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா அண்டை நாடுகளின் மீது நடந்த தாக்குதல்களுக்கு ஈரான் மன்னிப்பு கோரியுள்ளது.
அமெரிக்கா, இஸ்ரேலுக்கு பதிலடி என்ற பெயரில் சவுதி அரேபியா, யுஏஇ, கத்தார், ஓமன், பஹ்ரைன் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மற்றும் தூதரகங்களை குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. வெள்ளிக்கிழமை காலை துபாய் சர்வதேச விமான நிலையம் அருகே ட்ரோன் தாக்குதல் நடந்ததாகவும், அதில் சேதம் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியான், அண்டை நாடுகளின் மீது நடந்த தாக்குதல்களுக்கு மன்னிப்பு கேட்டார். அண்டை நாடுகளின் நிலப்பரப்பில் இருந்து ஈரான் மீது தாக்குதல் நடந்தால் அதற்கு பதிலடி கொடுக்கப்படும்; இல்லையெனில் அண்டை நாடுகளின் மீது தாக்குதல் நடத்தமாட்டோம் என அவர் தெரிவித்தார்.
இந்த நிலைப்பாட்டுக்கு இடைக்கால தலைமை கவுன்சில் ஒப்புதல் வழங்கியுள்ளதாகவும், இதுவரை நடந்த தாக்குதல்களுக்கு மன்னிப்பு கோருவதாகவும் அவர் கூறினார்.




