நடிகர் விஜயின் மனைவி சங்கீதா, தனக்கும் அவர்களது குழந்தைகளுக்கும் நியாயமான ஜீவனாம்சம் வழங்க வேண்டும் எனக் கோரி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்துள்ளார். தங்குவதற்கு இடமின்றி இருப்பதாக கூறி, நீலாங்கரை வீட்டில் வசிக்க அனுமதி வழங்கவும் அவர் கேட்டுள்ளார்.

மனுவில், வீட்டுக்குள் தன்னை விஜய் அனுமதிக்க மறுப்பதாக சங்கீதா குற்றம்சாட்டியுள்ளார். கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டும் விஜய், தன்னையும் குழந்தைகளையும் பராமரிக்க உரிய ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், விவாகரத்து வழக்கு முடியும் வரை தேவையான வசதிகளுடன் நீலாங்கரை வீட்டில் தங்க அனுமதிக்க இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என நீதிமன்றத்திடம் கோரியுள்ளார்.

தனக்கும் குழந்தைகளுக்கும் சேர வேண்டிய சொத்துகளை நியாயமாக வழங்க வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கிடையில், நடிகை திரிஷாவுடன் ஜோடியாக விஜய் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் விவாதமாகி, கட்சியினரும் ரசிகர்களும் அதிருப்தி தெரிவித்து வருவதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.