சட்டசபை தேர்தல் வாக்குறுதிகளின் ஒரு பகுதியாக, மகளிரை மையமாகக் கொண்ட தேர்தல் வாக்குறுதிகளை த.வெ.க. தலைவர் விஜய் இன்று அறிவிக்க உள்ளார்.
த.வெ.க. தலைமை வெளியிட்ட அறிக்கையில், சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று கட்சி சார்பில் மகளிர் தின விழா நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சி மாமல்லபுரம் ‘போர் பாயின்ட்ஸ் பை ஷெரட்டன்’ ஹோட்டலில் மாலை 3:00 மணி முதல் 5:00 மணி வரை நடைபெறுகிறது. இதில் மகளிருக்கான திட்டங்கள் குறித்து விஜய் அறிவிப்பார் என கூறப்பட்டுள்ளது.
நுழைவுச்சீட்டு உள்ளவர்களுக்கே அனுமதி வழங்கப்படும் என்றும் கட்சி தெரிவித்துள்ளது.
மேலும், அனைத்து மாவட்டங்களிலும் நாளை மகளிர் தின விழா கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.




