வயது உறுதிப்படுத்தலுக்குப் பின் நீதிமன்ற உத்தரவு

மேற்கு வங்கத்திற்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாக கூறப்படும் வழக்கில் 2005ல் கைது செய்யப்பட்ட வங்கதேச நபர், சுமார் 21 ஆண்டுகளாக காவலில் இருந்த நிலையில், அவரை உடனடியாக விடுவிக்க கொல்கட்டா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிறுவனாக இருந்தபோது கைது

கைது செய்யப்பட்ட போது அவருக்கு 15 வயது என்றும், அப்போது சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. பின்னர், வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி அவர் உயர் நீதிமன்றத்தை அணுகினார்.

‘ஆசிபிக்கேஷன்’ பரிசோதனை அறிக்கை

விசாரணையின் போது வயதை நிர்ணயிக்க ‘ஆசிபிக்கேஷன்’ பரிசோதனை நடத்த மாவட்ட நீதிமன்றத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் அறிக்கையில், கைது நேரத்தில் வயது 15 என்றும், தற்போது 36 என்றும் உறுதியாகியுள்ளது.

அதிகபட்ச தண்டனை காலத்தை மீறிய காவல்

அறிக்கையை ஆய்வு செய்த நீதிபதிகள், சிறார் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டத்தின் கீழ் சிறாருக்கு விதிக்கக்கூடிய அதிகபட்ச தண்டனை ஏழு ஆண்டுகள் மட்டுமே எனக் குறிப்பிட்டனர். அவர் 21 ஆண்டுகள் காவலில் இருந்ததால், உடனடியாக விடுவித்து வங்கதேசத்திற்கு திருப்பி அனுப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.