மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலின் கும்பாபிஷேகம் வரும் செப். 19ஆம் தேதி நடத்தப்படும் என அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
கும்பாபிஷேகம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சென்னையில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் திருப்பணிகள் மற்றும் வீர வசந்தராயர் மண்டபத்தின் புனரமைப்பு பணிகள் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
ஆனால் கோவிலில் ஆண்டு முழுவதும் நடைபெறும் திருவிழாக்கள் மற்றும் உற்சவங்களை நிறுத்த இயலாத காரணத்தால், கும்பாபிஷேக தேதி செப். 19 என நிர்ணயிக்கப்பட்டதாக கூறப்பட்டது.




