ஜெருசலேம்: ஈரானுடன் “முழு பலத்துடன்” போரை தொடருவோம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தொலைக்காட்சி பேட்டியில் உறுதி தெரிவித்தார்.

இஸ்ரேலும் ஈரானும் மீண்டும் “உண்மையான நண்பர்கள்” ஆக மாறும் நாள் வரும் என்றும், அந்த தருணம் நெருங்கி வருவதாகவும் அவர் கூறினார். மோதலின் அடுத்த கட்டம் மேலும் பல ஆச்சரியங்களை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்தார்.

இஸ்ரேலின் வெற்றி உலகளாவிய அணுசக்தி அச்சுறுத்தல்களை நீக்க உதவும்; அதே நேரத்தில் இஸ்ரேல்–ஈரான் இடையே அமைதிக்கும் வழிவகுக்கும் என நெதன்யாகு கூறினார். அயதுல்லா அலி கமேனியின் ஆட்சி உலகிற்கு ஆபத்தை உருவாக்கியதாக பல நாடுகள் புரிந்துகொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஈரான் 12 அண்டை நாடுகளை தாக்கியுள்ளதாக கூறிய நெதன்யாகு, ஈரான் தாக்குதலால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு இஸ்ரேல் ஆதரவாக இருக்கும் என்றார். மோதல்கள் விரிவடைவதால் பல நாடுகள் இப்போது இஸ்ரேலுடன் நெருக்கமாக பணியாற்றி வருவதாகவும், ஒத்துழைப்புக்காக அணுகி வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும், ஈரான் வான்வெளியை கிட்டத்தட்ட முழுமையாக இஸ்ரேல் கட்டுப்படுத்தி இருப்பதாகவும், ஈரான் ராணுவம் மற்றும் தொடர்புடைய இலக்குகள் மீது தாக்குதல்களை இஸ்ரேல் படைகள் விரிவுபடுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.