பீஹார் முதல்வர் நிதிஷ் குமாரின் மகன் நிஷாந்த் குமார், சனிக்கிழமை பாட்னாவில் ஐக்கிய ஜனதா தளம் (ஜே.டி(யு)) கட்சியில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார்.
பாட்னாவில் உள்ள கட்சி அலுவலகத்தில் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் முன்னிலையில் அவர் கட்சியில் சேர்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிகழ்வு, முதல்வராக பதவியேற்ற நான்கு மாதங்களிலேயே நிதிஷ் குமார் ராஜினாமா செய்ய உள்ளதாக அறிவித்துள்ள பின்னணியில் நடந்துள்ளது. மேலும், தேசிய அரசியலில் ராஜ்ய சபா எம்பியாக காலடி எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கான வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
நிதிஷ் குமாரின் ராஜினாமா குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், நிதிஷ் விலகிய பின் நிஷாந்த் குமாருக்கு துணை முதல்வர் பதவி வழங்குவது குறித்து ஒருமித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக நிதிஷ் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.




