நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா, விவாகரத்து வழக்கு முடிவுக்கு வரும் வரை சென்னை நீலாங்கரை இல்லத்தில் தங்க அனுமதி வழங்க வேண்டும் என செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல் செய்துள்ளார்.

1999ஆம் ஆண்டு நடந்த திருமணத்தை ரத்து செய்யக் கோரி சங்கீதா ஏற்கனவே செங்கல்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், இடைக்கால உத்தரவாக நீலாங்கரை வீட்டில் வசிக்க அனுமதிக்க வேண்டும் என இடையீட்டு மனுவும் தாக்கல் செய்துள்ளார்.

மனுவில், தாம் பிரிட்டன் குடியுரிமை பெற்றவர் என்றும், தற்போது தங்குவதற்கு தனியாக வீடு இல்லாததால் நீலாங்கரை இல்லத்தில் வசிக்க அனுமதி வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், விவாகரத்து தொடர்பாக நீதிமன்றத்தை அணுகினால் நீலாங்கரை வீட்டில் தங்க அனுமதிக்க முடியாது என விஜய் வழக்கறிஞர்கள் மூலம் மிரட்டல் விடுத்ததாகவும், வழக்கு தொடர்ந்ததால் விஜய் அனுமதி வழங்க மாட்டார் என்றும் தெரிவித்துள்ளார். இடைக்கால அனுமதி வழங்கினாலும் விஜய்க்கு பாதிப்பு இல்லை எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.