அவசர ஒப்புதல்

ஈரானுடனான போர் தீவிரமடைந்து வரும் சூழலில், இஸ்ரேலுக்கு 12,000 வான் வழித் தாக்குதல் வெடிகுண்டு உறைகளை விற்க அமெரிக்க வெளியுறவுத்துறை அவசரகால ஒப்புதலை வழங்கியுள்ளது.

இஸ்ரேல் கோரிக்கை

இந்த விற்பனை, இஸ்ரேல் முன்வைத்த கோரிக்கையின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுவதாக தகவல் தெரிவிக்கிறது.

மதிப்பு மற்றும் விவரம்

மொத்தமாக ரூ.1,366 கோடி மதிப்பிலான இந்த தொகுப்பில், தலா சுமார் 450 கிலோ எடையுள்ள 12,000 வெடிகுண்டு உறைகள் இடம்பெறுகின்றன.

பின்னணி

மோதல் அதிகரித்துள்ள நிலையில், அவசர விதிமுறைகளின் கீழ் இந்த பரிமாற்றத்திற்கு விரைவாக அனுமதி வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.