சென்னையில் இன்று (மார்ச் 9) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கணிசமாக குறைந்தது. சவரனுக்கு ரூ.800 சரிந்து, ஒரு சவரன் ரூ.1,19,600-க்கு விற்பனை ஆகிறது.

கிராம் விலையும் ரூ.100 குறைந்து ரூ.14,950 ஆக உள்ளது. மேற்காசியாவில் நிலவும் பதற்றம் உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை சமீப நாட்களில் ஏற்றத் தாழ்வை சந்தித்து வருகிறது.

இந்த மாத தொடக்கத்தில் இருந்து குறைந்து வந்த தங்கம் விலை கடந்த சனிக்கிழமை உயர்ந்திருந்தது. அப்போது கிராமுக்கு ரூ.90 உயர்ந்து ரூ.15,050-க்கும், சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ரூ.1,20,400-க்கும் விற்பனையானது.

நேற்று விடுமுறை தினம் என்பதால் விலையில் மாற்றமில்லை. இன்று மீண்டும் சரிவு ஏற்பட்ட நிலையில், வெள்ளி விலை மாற்றமின்றி கிராமுக்கு ரூ.290-க்கும், கிலோ ரூ.2,90,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.