டில்லி மதுபானக் கொள்கை வழக்கில் முன்னாள் முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால், முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா உள்ளிட்ட 23 பேரின் விடுதலையை எதிர்த்து சிபிஐ தாக்கல் செய்த மேல்முறையீட்டை டில்லி உயர்நீதிமன்றம் திங்கள்கிழமை விசாரணைக்கு ஏற்றது.

கடந்த வாரம் சிறப்பு நீதிமன்றம், குற்றம் நடந்ததற்கான போதுமான ஆதாரங்கள் இல்லை எனக் கூறி 23 பேரையும் விடுவித்திருந்தது. மேலும், சிபிஐ வழக்கு யூகங்களின் அடிப்படையில் இருப்பதாகவும் நீதிமன்றம் குறிப்பிட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இன்றைய விசாரணையில் சிபிஐ சார்பில் ஆஜரான மத்திய அரசு வழக்கறிஞர் துஷார் மேத்தா, சிறப்பு நீதிமன்றத்தின் விடுதலை உத்தரவு சட்டத்திற்கு முரணானது என வாதிட்டார். வழக்கின் உண்மைத்தன்மையை முழுமையாக பரிசீலிக்காமல் ஆரம்ப கட்டத்திலேயே விடுவித்தது தவறு என்றும் அவர் கூறினார்.

இதையடுத்து, கெஜ்ரிவால் மற்றும் சிசோடியாவிடம் பதில் கோரி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கை மார்ச் 16-க்கு ஒத்திவைத்தது.