நடிகர்-இயக்குநர் ஆர். பார்த்திபன், எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்ட குறும்பட வீடியோ பதிவின் மூலம் புதிய சஸ்பென்ஸை உருவாக்கியுள்ளார். “விடியலாக முழு வீடியோவே வரும்” என அவர் குறிப்பிட்டதால், திரிஷாவைச் சுற்றிய விவாதங்களுக்கிடையே இந்த பதிவு கவனம் பெற்றுள்ளது.
இந்த விவகாரத்தின் பின்னணியாக, நடிகரும் தவெக தலைவருமான விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததாக செய்திகள் வெளியாகின. அந்த மனுவில், பிரபல நடிகை ஒருவருடன் விஜய் தொடர்பில் இருப்பதாகவும், தன்னை வீட்டில் சேர்க்க மறுப்பதாகவும் குறிப்பிடப்பட்டதாக கூறப்பட்டது. இதையடுத்து தவெக மகளிர் தின நிகழ்ச்சியில் விஜய், “கவலைப்பட வேண்டாம்; நான் பார்த்துக் கொள்கிறேன்” என தெரிவித்தார்.
இதற்கிடையில் திரிஷா-விஜய் தொடர்பான பேசுபொருள் இணையத்தில் தொடர்ந்த நிலையில், ஒரு நிகழ்ச்சியில் பார்த்திபன் “குந்தவை (திரிஷா) வீட்டுக்குள்ளே இருப்பது நல்லது” என கூறியதாகவும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து திரிஷா அறிக்கை வெளியிட்டதாகவும் செய்திகள் வந்தன. அதன் பின்னர் பார்த்திபன் வருத்தம் தெரிவித்ததாகவும் கூறப்பட்டது.
இப்போது அவர் வெளியிட்டுள்ள புதிய பதிவில், “கோடிட்ட இடங்களை நீங்கள் நிரப்புவதற்குள்… விடியலாக முழு வீடியோவே வரும்” என எழுதப்பட்டுள்ளது. மேலும் “3 sha” என்ற தலைப்பில் 13 வினாடிகள் மட்டுமே உள்ள ஒரு வீடியோவும் இணைக்கப்பட்டுள்ளது.
அந்த வீடியோவில் திரிஷாவை பாராட்ட நினைத்ததாக தொடங்கும் பார்த்திபன், பின்னர் வசனங்களின் ஒலியை ஊமையாக்கி, இடையிடையே எடிட்டிங் செய்து புரோமோ பாணியில் சஸ்பென்ஸ் உருவாக்கியுள்ளார். வீடியோ வெளியான சிறிது நேரத்திலேயே அது வைரலாகி, “திரிஷாவை பற்றி ஏதோ சொல்ல வருகிறார்; முழு வீடியோ வரை சஸ்பென்ஸ் வைத்துள்ளார்” என்ற கருத்துகள் இணையத்தில் பரவி வருகின்றன.




