புதுடில்லி: ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது.

இதையடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட பிரதமர், இந்த வெற்றி வீரர்களின் அபாரத் திறமை, உறுதிப்பாடு மற்றும் குழு முயற்சியை வெளிப்படுத்துகிறது என்று குறிப்பிட்டார்.

மேலும், தொடர் முழுவதும் அணி அசாதாரணமான மனவலிமையை காட்டியதாகவும், இந்த வெற்றி ஒவ்வொரு இந்தியரின் மனதையும் பெருமையாலும் மகிழ்ச்சியாலும் நிரப்பியதாகவும் அவர் தெரிவித்தார்.