மேற்காசிய நாடுகளில் நீடிக்கும் போர் பதற்றத்தின் எதிரொலியாக, வாரத்தின் முதல் வர்த்தக நாளான திங்கட்கிழமை (மார்ச் 9) இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவுடன் தொடங்கின.

மும்பை பங்குச்சந்தை குறியீடு சென்செக்ஸ் 2,225 புள்ளிகள் குறைந்து 76,693 புள்ளிகளில் வர்த்தகமாகியது. தேசிய பங்குச்சந்தை குறியீடு நிப்டி 720 புள்ளிகள் சரிந்து 24,731 புள்ளிகளில் காணப்பட்டது.

இதே பதற்றம் ஆசிய சந்தைகளிலும் பிரதிபலித்தது. ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட பல ஆசிய நாடுகளின் பங்குச்சந்தைகளும் சரிவுடன் வர்த்தகமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையும் திடீரென உயர்ந்து, பீப்பாய் ஒன்றுக்கு 100 டாலரை தாண்டி 110 டாலருக்கும் மேல் வர்த்தகமானது. ஈரான்–இஸ்ரேல்–அமெரிக்கா மோதல் தொடர்ந்தால் கச்சா எண்ணெய் விலை 150 டாலரைத் தாண்டக்கூடும் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.