விஜய் தலைமையிலான த.வெ.க. அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் இணையப் போகிறது என்ற தகவல் மீண்டும் வெளியாகியுள்ளது. இது புதிதல்ல என அ.தி.மு.க. உள்ளேயுள்ள ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.

அவர்களது வாதப்படி, விஜய்க்கு அரசியல் அல்லது குடும்ப ரீதியில் சிக்கல், அழுத்தம் போன்ற சூழ்நிலைகள் உருவாகும் நேரங்களில் இதுபோன்ற கூட்டணி செய்திகள் அடிக்கடி வெளிவருகின்றன. கரூரில் விஜய் பங்கேற்ற கூட்டம் தொடர்பான காலகட்டத்திலும், ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் சென்சார் அனுமதி விவகாரத்தைச் சுற்றியும் இதேபோன்ற தகவல்கள் வந்ததாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

தற்போது, விஜய்க்கு சி.பி.ஐ. மீண்டும் சம்மன் அனுப்பியதாக கூறப்படும் சூழலில், கூட்டணி குறித்த அதே தகவல் மீண்டும் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரச்னைகளில் இருந்து தன்னை தற்காத்துக்கொள்ளும் நோக்கில் இது ஒரு திட்டமிட்ட தந்திரம் என்றும், கூட்டணி தகவலை அவரே வெளியிடச் செய்கிறார் என்றும் அந்த தரப்பு குற்றம்சாட்டுகிறது. ஆனால், விஜயை நன்கு அறிந்தோர், அவர் இறுதியில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணிக்கு வரமாட்டார் என கூறுவதாகவும் செய்தி தெரிவிக்கிறது.